Monday, 29 April 2013

NAICKERS

ஜக்கம்மா
 எங்கும் என்றும் எதிலும் எங்கள் இனம் காக்கும் எங்கள் தாய் சக்க தேவி வரலாறு முதலில் எழுதி பின்னர் நாயக்கர் வரலாறு எங்கள் தாய்க்கு சமர்பனம்
                    ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை இன்றும்  உண்டு
கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய ஆந்திராவில்இஸ்லாமியரின் படை எடுப்பால் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதற்கு இஸ்லாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி (இன்றைய தமிழகம்செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி வந்தனர்.
இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார்.
மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மன்னர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இவர் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். இவருடைய அரண்மனை அமைந்திருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு கோவில் ஒன்றும் அமைத்திருந்தார். இவர் தினமும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்குதான் வேண்டிக் கொள்வார் என்பதும் ஒரு கும்மிப் பாடல் மூலம் தெரிகிறது .

No comments:

Post a Comment